Tag Archives: 16_லெட்சம்_சுபாரி

Woman pays 16 lakh supari, kills husband and claims he had illicit affair !! No opposition left with husband dead :-(

 

News in Tamil and brief, non legal translation

 

non legal translation: Venkatesh is a building contractor living in the posh Banjara Hills area of Hyderabad with his wife Lakshmi. The couple have three children Manohar (28), Mahesh (26) Madan (24). Mahesh lives in America and Madan in Canada

Lakshmi claims that her husband had an illicit affair with another woman and even threatened to bring her home

So, Lakshmi planned to kill her husband and paid a supari of Rs 16 lakhs to her brother’s son Pradip Kumar. However Pradip Kumar started threatening Lakshmi and demanded Rs 30 Lakhs, lest he would reveal Lakshmi’s plans

So, Lakshmi decided to kill her husband herself. She mixed sleeping tablets in her husband’s coffee. Venkatesh dozed off after drinking the coffee. Lakshmi poured Kerosine on Venkatesh and Burnt him alive

The next day she surrendered to the police and told them “…I paid Rs 16 Lakhs to my brother’s on Pradip Kumar…. so arrest him as well…”

Police have not arrested Lakshmi and Pradip Kumar and are conducting inquiries

==============news =============

| சனிக்கிழமை, 30, மார்ச் 2013 (14:44 IST)

கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரை கொலை செய்து எரித்த மனைவி

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதி கவுரிசங்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு மனோகர் (28), மகேஷ் (26), மதன் (24) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் மகேஷ் அமெரிக்காவிலும், மதன் கனடாவிலும் வசிக்கிறார்கள்.

வெங்கடேசுக்கும் ஐதராபாத் இபுராகிம் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த லட்சுமி கணவரை கண்டித்தார். இதில் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கள்ளக்காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து குடித்தனம் நடத்துவேன் என்று வெங்கடேசன் மனைவியை மிரட்டினார். இதனால் லட்சுமி கணவரை கொலை செய்ய சகோதரர் மகன் பிரதீப் குமாரிடம் கூறினார். அதற்கு அவர் சம்மதித்தார். கணவரை கொலை செய்ய பிரதீப்குமாரிடம் ரூ.16 லட்சம் கூலியாக கொடுத்தார்.

ஆனால் அவர் லட்சுமியை மிரட்ட தொடங்கினார். கொலை திட்டத்தை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.30 லட்சம் கொடு என்று மிரட்டினார்.

இதனால் லட்சுமி கணவரை தானே கொலை செய்ய திட்டமிட்டு, கணவருக்கு காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். காபியை குடித்த வெங்கடேசன் ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தார்.

கணவர் உயிர் பிழைத்து விடுவாரோ என்று அஞ்சினார். இதனால் சமையல் அறையில் இருந்து மண்எண்ணை எடுத்து வந்து கணவர் உடல் மீது ஊற்றி தீவைத்தார். உடல் கருகி வெங்கடேசன் பிணமானார்.

மறுநாள் காலை பக்கத்து வீட்டுக்காரரிடம் நான் என் கணவரை கொலை செய்துவிட்டேன் என்று கூறினார். மேலும் பஞ்சாரஹில்ஸ் போலீசில் சரண் அடைந்தார்.

போலீசில் லட்சுமி கூறும்போது, என் கணவரை கொலை செய்ய சகோதரர் மகனுக்கு ரூ.16 லட்சம் கொடுத்தேன். அவர் ஏமாற்றி விட்டார். அவரையும் கைது செய்யுங்கள் என்று புகார் கூறினார். போலீசார் லட்சுமியையும் பிரதீப்குமாரையும் கைது செய்தனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95683