Daily Archives: October 16, 2018

Wife’s ex lover brutally attacks, cuts husband just 1 month after marriage. CCTV cameras, mobile phone signals nail wife & lover

They got married just a month ago. Wife wanted to go to the beach and took her husband to a secluded area. there she wanted to play hide and seek and tied her husband’s eyes. Once tied up, the husband was suddenly attacked by wife’s ex lover who was hiding nearby. The husband was badly cut on the head. Fishermen found the husband and took him to hospital.

Meanwhile wife claimed that it was a robbery attempt and her Jewels were missing

However Scrutinizing the CCTV cameras and wife’s mobile phone signals the police nailed the wife and her lover

They located and arrested the murderer, lover from a student hostel !!

கடற்கரையில், ‘கண்ணாமூச்சி ரே ரே…’ : கணவனுக்கு, ‘ஸ்கெட்ச்’ போட்ட மனைவி கைது

Added : அக் 14, 2018 | கருத்துகள் (35)
 கடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' :  கணவனுக்கு, 'ஸ்கெட்ச்' போட்ட மனைவி கைது

சென்னை: கணவனை சுத்தியல், அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற மனைவி, கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டாள்.அருப்புகோட்டையை சேர்ந்தவர் கதிரவன், 30; ஐ.டி., ஊழியர். இவருக்கும், துாத்துக்குடி, விளாத்திக்குளத்தை சேர்ந்த அனிதா, 25, என்பவளுக்கும், கடந்த மாதம், 12ல், திருமணம் நடைபெற்றது.சென்னை, சோழிங்கநல்லுாரில், கதிரவன் பணி புரிந்தார். பல்லாவரம், தர்கா சாலையில் உள்ள வீட்டில், இருவரும் தங்கினர். நேற்று முன்தினம் மதியம், 11:30 மணிக்கு, இருவரும், திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த, வடக்கு பக்கம் சென்று, இருவரும் கண்ணில் துணி கட்டி, கண்ணாமூச்சி விளையாடினர்.அப்போது, அங்கு வந்த மர்ம நபர், சுத்தியல் மற்றும் அரிவாளால், கதிரவன் தலையில் சரமாரியாக தாக்கினான். அனிதாவை, எதுவும் செய்யவில்லை. ஆனால், அனிதா அணிந்திருந்த, 12 சவரன் நகை மற்றும் இருவரது மொபைல் போன்களையும் பறித்துச் சென்றான். பலத்த காயத்துடன், சுயநினைவு இழந்த கதிரவனை, அங்கிருந்த மீனவர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். திருவான்மியூர் போலீசார் விசாரித்தனர். அங்குள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்ததில், கதிரவனை தாக்கியவன், ஓர் ஆட்டோவில் ஏறி செல்வது தெரியவந்தது.கதிரவனின் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அனிதாவின் போன் மட்டும், ‘ஆனில்’ இருந்தது. அந்த போனின் சிக்னல், மதியம், 1:45 மணிக்கு, மதுரை சென்று கொண்டிருந்த, வைகை ரயிலை காட்டியது.இந்நிலையில், போலீசார் விசாரணையில், அனிதா முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினாள். தீவிர விசாரணையில், அனிதாவின் கள்ளக் காதலனான, விளாத்திகுளம், குறுவர்பட்டியை சேர்ந்த, அந்தோணி ஜெகன், 26, என்பவன், கதிரவனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.திருவான்மியூர் காவல் ஆய்வாளர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையிலான போலீசார், மதுரை சென்று, காமராஜர் பல்கலை கழக விடுதியில் இருந்த அந்தோணி ஜெகனை, நேற்று காலை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவனிடமிருந்து, 12 சவரன் நகை, சுத்தியல், அரிவாள் போன் றவையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.சம்பவம் குறித்து, போலீசார் கூறியதாவது:அனிதா, ஓர் ஆண்டுக்கு முன், மதுரை காமராஜர் பல்கலையில், எம்.சி.ஏ., படித்து வந்தாள். அங்கு, பி.ஏ., படித்த, அந்தோணி ஜெகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது, அனிதாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும், உடனே, கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணத்திற்கு பிறகும், இருவரும், மொபைல் போன் வழியாக காதலை வளர்த்துள்ளனர். தங்களின் காதலுக்கு இடையூறாக இருந்த, கதிரவனை கொலை செய்யவும் திட்டமிட்டனர். ஒரு வாரத்திற்குமுன், கதிரவனும், அனிதாவும் ஏற்காடு சென்றுள்ளனர். அங்கு கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டனர்; அது நடக்கவில்லை.அதன்பின், திருவான்மியூர் கடற்கரையில் வைத்து, கொலை செய்ய திட்டம் போட்டனர். சம்பவத்தன்று காலையில், அந்தோணி ஜெகன், சென்னை வந்துவிட்டான்.ஜெகனிடம், ‘உன்னை கதிரவனுக்கு தெரியாது. நாங்கள் கண்ணாமூச்சு ஆடுவோம்; அப்போது நீ, கதிரவனை கொன்றுவிடு. நகை பறிப்பு கொள்ளையன் தாக்கியதாக, நான் போலீசில் புகார் கொடுக்கிறேன்’ என, அனிதா திட்டத்தை விவரித்துள்ளாள்.சம்பவத்தின் போது, ஜெகன், பையில் கொண்டு வந்த சுத்தியலால், முதலில் தாக்கினான். நிலை குலைந்து, கதிரவன் கீழே விழுந்ததும், பையில் இருந்த அரிவாளை, அனிதா எடுத்து கொடுத்தாள். நகையையும், அவளே கழற்றி கொடுத்தாள்.’கணவன், உயிருக்கு போராடும் போது, அனிதா பதற்றப்படவில்லை; அழவும் இல்லை’ என, மீனவர்கள் தெரிவித்தனர். தீவிர விசாரணைக்கு பின், கொலை செய்ய முயற்சித்ததை, அனிதா ஒப்புக்கொண்டாள்.இவ்வாறு போலீசார் கூறினர்.