Daily Archives: October 7, 2018

Wife, paramour & 3 others killed husband in gruesome manner for questioning adultery. Please send them to Supreme Court for proper education !!!. கணவரை கொலை செய்த மனைவி உட்பட, ஐந்து பேர் கைது | Dinamalar

கணவரை கொலை செய்த மனைவி உட்பட, ஐந்து பேர் கைது
பதிவு செய்த நாள்: அக் 07,2018 03:48

ராணிப்பேட்டை:கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்த, மனைவி உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த, புளியங்கண்ணைச் சேர்ந்த வெல்டர், அருண்குமார், 28. இவர் மனைவி ரம்யா, 23, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 3ம் தேதி, அருண்குமார், பொன்னம்பட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில், அவரின் மனைவி ரம்யா, கள்ளக்காதலன் தாமஸ் ஆல்வா எடிசனுடன் சேர்ந்து, கூலிப்படையினர் உதவியுடன் அருண்குமாரை கொலை செய்தது, தெரியவந்தது.

இதையடுத்து, ரம்யா, கள்ளக்காதலன் தாமஸ் ஆல்வா எடிசன், 27 மற்றும், 22 – 26 வயதுடைய கூலிப்படையை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:தாய் மாமனான, தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், ரம்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை, அருண்குமார் கண்டித்ததால், அவரை,கூலிப்படையினரைக் கொண்டு, கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அனைவரும், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
— Read on m.dinamalar.com/detail.php