Daily Archives: July 27, 2014

5 crore dowry demand !! case on 6 members of family !!

Thiruchengode, Namakkal, Tamil Nadu

A doctor wife has filed a dowry case on her husband and five others including in laws, husband’s aunt, and others alleging 5 crore dowry demand !!

The husband is also a doctor !!

The marriage was solemnised on Nov 7th 2011 and the wife has alleged that 150 soverigns gold was given during marriage, but husband and co are torturing her for further dowry !!

police have registered a case

original source
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=125840


***********************

5 கோடி வரதட்சணை கேட்ட பெண் மருத்துவரின் கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நக்கரிலுள்ள வேலூர் சாலையைச் சேர்ந்தவர் மருத்துவர் அபிராமி (வயது-27). இவருக்கும், பள்ளிபாளையம் சாளியிலுள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் சிவசுப்ரமணியத்திற்கும் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது அபிராமிக்கு, 150 பவுன் நகை மற்றும் ரூ 2-லட்சம் மதிப்புள்ள கட்டில் பீரோ, ரூ.50-ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீதனமாக கொடுத்துள்ளனர்.

திருமணமான 15-ம் நாளிலேயே கணவர் குடும்பத்தினர் கூடுதளாக சீதனம் கேட்டு அபிராமியை துன்புறுத்தியதாகவும். பிறகு, 2013-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி அபிராமியை அவரது தாத்தா வீட்டுக்கு அனுப்பி கணவருக்கு மருத்துவமனை கட்ட இன்னும் கூடுதலாகா 5 கோடி ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு வா என்று கனவர் வீட்டார் அனுப்பிவைத்தனர்.

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற இரண்டு குடும்பத்தினரின் கலந்தாய்வுக்கு பிறகு கனவர் வீட்டுக்கு வந்த வந்த என்னையும், பாட்டியையும் சிவசுப்பிரமணியன் குடும்பத்தினர் திட்டியதுடன் மிரட்டல் விடுத்தனர் என்று கூறிய அபிராமி இதுகுறித்து, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மருத்துவர் அபிராமியின் கணவர் மருத்துவர் சிவசுப்பிரமணியம் (வயது-28), மாமனார் பழனிவேல் (வயது-62) மாமியார் விஜயலட்சுமி (வயது-57), சிவசுப்பிரமணியத்தின் அத்தை லதா, மாமா பாலமுருகன், வெண்ணந்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் ஆகிய ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or https://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases

regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn’t given up, Male, activist

Elderly mother in law arrested near Sattur, TN on ablaa naari, DIL’s complaint !! no SC guidelines here ??

Marimuthu (32) is married to Kala Rani (21) couple of years ago. Kala Rani has filed a dowry complaint against husband and in laws. The mother in law has been arrested and police are on the look out for husband and father in law

What about the Hon. Supreme court directions in Arnesh kumar Vs State of Bihar ?? http://bit.ly/1nLDXel

*********************

கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை மாமியார் கைது- கணவருக்கு வலைவீச்சு

மாற்றம் செய்த நாள்:
சனி, ஜூலை 26,2014, 2:09 AM IST

பதிவு செய்த நாள்:
சனி, ஜூலை 26,2014, 2:09 AM IST

201407260209514607_Additional---Asking-for-dowryGirl-torture---Mother_SECVPF.gif

சாத்தூர் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக மாமியார் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாமியார் கைது

சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியை சேர்ந் தவர் கருப்பசாமி. இவரது மகன் மாரிமுத்து ( வயது 32). இவருக்கும், தூத்துக் குடி மாவட்டம் சங்கரலிங்கா புரத்தை சேர்ந்த (21) கலா ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 7 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் தரப்பட்டது.

இந்தநிலையில் கணவர் மாரிமுத்து, மாமியார் கோம தியம்மாள், மாமனார் கருப்ப சாமி ஆகியோர் சேர்ந்து கூடுத லான 10 பவுன் நகை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குபதிவு செய்து கலாராணியின் மாமி யாரான கோமதியம்மாளை கைது செய்தனர். மேலும் கணவர் மாரிமுத்து, மாமனார் கருப்ப சாமி ஆகியோரை தேடி வரு கின்றனர்.

source
http://www.dailythanthi.com/News/Districts/2014/07/26020959/Additional—Asking-for-dowryGirl-torture—Mother.vpf

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or https://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases

regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn’t given up, Male, activist

farmer husband harassed by wife seeks collector’s permission to commit suicide ; wife is allegedly threatening him and seeking 20 lakhs alimony !!

Farmer seeks collector’s permission to commit suicide as wife seeks 20 Lakhs alimony !!

A Karnataka farmer from Chigmagalur area , who has been harassed by his wife, has sought the collector’s permission to commit suicide

The farmer has stated in his petition that his wife is lavish, and he is unable to meet her demands for money

Moreover she spends his money on her relatives and is threatening the father thru her mother and brother

Distraught farmer has sought the collector’s permission to commit suicide


மனைவி கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் விவசாயி மனு!

on July 26, 2014 at 3:13 pm /

17

மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயி ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பிழைக்க வைக்க முடியாத நிலையில் உள்ளவர்களை கருணை கொலை செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மனைவியின் கொடுமை தாங்க முடியாததால் கருணை அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு கலெக்டர் மனு கொடுத்துள்ளார்.

சிக்மகளூர் மாவட்டம், தரிகெரே அருகே கெரேகுச்சி கிராமத்தை சேர்ந்த லட்சுமேஷா என்ற 28 வயதுடைய விவசாயி, மாவட்ட கலெக்டர் சேகரப்பாவை சந்தித்து கொடுத்துள்ள மனுவில், “நான் சிக்மகளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா கெரேகுச்சியை சேர்ந்தவன். நான் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான், தொட்டகுந்தூர் கிராமத்தை சேர்ந்த ராமையா என்பவரின் மகள் பவித்ராவை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணத்துக்கு முன்பு எனது மனைவி பவித்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு நான் ஜார்க்கண்ட் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டேன். மேலும் பவித்ரா நர்சுக்கு படித்தபோது அவர்கள் வீட்டில் ஏற்பட்ட கடனை நான் தான் அடைத்தேன்.

கொடுமை

பவித்ரா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். இதனால் நான், பவித்ரா கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். மேலும் பவித்ரா என்னிடம் செல்லாமல் எனது பணத்தை எடுத்து அவரது குடும்பத்தினருடன் ஆடம்பரமாக செலவழித்து வந்தார். இதனை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பவித்ரா என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறார். நான் பணம் கொடுக்க மறுத்தால், பவித்ரா தனது சகோதரன் ஹரீசை வைத்து மிரட்டுகிறார். இதனால் நான் பவித்ராவுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து வந்தேன். இதனால் பவித்ரா அந்த பகுதியில் உள்ள மகளிர் அமைப்பினருடன் சேர்ந்து கொண்டு, நான் அவரை வரதட்சணை கேட்டு மிரட்டுகிறேன் என்று என்னிடம் விவாகரத்து கேட்டு தரிகெரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அவர் என்னிடம் ஜீவனாம்சமாக ரூ.20 லட்சம் கேட்கிறார்.

நான் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் அவரது தாய் பருவதம்மா, சகோதரன் ஹரீஷ் ஆகியோர் விவாகரத்து கொடுக்கும் படி மிரட்டுகிறார்கள். இந்த கொடுமையால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன். இதனால் கருணை அடிப்படையில் தற்கொலை செய்ய அரசு அனுமதி தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

– See more at: http://newsalai.com/?p=21114#sthash.qzAlVVy2.dpuf

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or https://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases

regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn’t given up, Male, activist