Daily Archives: April 21, 2012

Link

அப்பா….தாங்கலைப்பா ….திருமணத்துக்கு தாமதமாய் வந்ததால் மணமகனுக்கு அடி..உதை …

அப்பா….தாங்கலைப்பா ….
=================================
திருமணத்துக்கு தாமதமாய் வந்ததால் மணமகனுக்கு அடி..உதை …
=============================================
மணப்பெண் வேறு ஒருவரை மணந்தாள் !!
=============================================
ஆனா ஒண்ணு ஒப்புக்கணும்… இவன் மேல 498ஆ கேஸ் போடாம விட்டாளே !! வேணும்மினே தாமதமா வந்தான் …டவுரி கேட்டான்னு சொல்லாம விட்டாளே …சாமி..திகுக்கு எட்டு கும்புடுடா சாமி

=============================================

 

Ghaziabad:  Being late for his own wedding proved costly for a bridegroom as he and his relatives were beaten up by irked family members of the bride who was married off to another person.

Groom Jameel was to marry Nagma yesterday at 10:30 am in Muradnagar area of the district, police said today.

However, the groom and his relatives reached the venue at 6:00 pm following which the angry family members of the bride beat them up, they said.

Police reached the spot and brought the situation under control after which Nagma was wedded to another youth, they said.

 

பிளஸ் 2 மாணவருடன் கள்ளக்காதல்: தங்கையை வெட்டிய அண்ணன் கைது

 

பிளஸ் 2 மாணவருடன் கள்ளக்காதல்: தங்கையை வெட்டிய அண்ணன் கைது

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூரை பக்கமுள்ளது சின்ன கூத்தம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் லட்சுமி (வயது 19). இவருக்கும், பேருஅள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் (23) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் லட்சுமி தனது தாயார் வீடான சின்ன கூத்தம்பட்டி அருகில் உள்ள பண்ணந்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இதற்கிடையில் லட்சுமிக்கும், அந்த பள்ளியில் உடன் படித்து வந்த சக மாணவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த லட்சுமியின் அண்ணன் மணிகண்டன் (21) லட்சுமியை கண்டித்தார்.

இருந்த போதிலும் லட்சுமி தனது கள்ளக்காதலனுடன் உள்ள தொடர்பை துண்டிக்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது கள்ளக்காதலனுடன் திருப்பூருக்கு ஓடிவிட்டார். இதுபற்றி அறிந்த லட்சுமியின் கணவர் கோவிந்தராஜ், அண்ணன் மணிகண்டன் ஆகியோர் திருப்பூர் சென்று லட்சுமியை மீட்டு வந்தனர்.

இது தொடர்பாக மணிகண்டனுக்கும், அவரது தங்கை லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த வெட்டு கத்தியால் லட்சுமியின் தலை, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

 

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=74154

ராமநத்தம் அருகே கள்ளக்காதலியின் கணவனை கொலை செய்தவர் சரண்

ராமநத்தம் அருகே கள்ளக்காதலியின் கணவனை கொலை செய்தவர் சரண்
“உல்லாசத்துக்கு இடையுறாக இருந்ததால் கொலை செய்தேன்”

திட்டக்குடி, ஏப்.20-

ராமநத்தம் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். `உல்லாசத்துக்கு இடையுறாக இருந்ததால் கொலை செய்தேன்’ என்று அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதல்

ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சோந்தவர் ராமசாமி(வயது 40) வெளிநாட்டில் வேலை செய்து வந்த ராமசாமி சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பினார்.

ராமசாமி வெளிநாட்டில் இருந்தபோது அவரின் மனைவி தனலட்சுமிக்கும் போத்திரமங்கலத்தை சேர்ந்த கோடி (45) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கோடியும், தனலட்சுமியும் நெருங்கிய உறவினர்கள் இருவரும் கணவன், மனைவி போல் உல்லாசமாக இருந்து வந்தனர்., இந்த நிலையில் ராமசாமி வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் அவர் மனைவிக்கு அனுப்பிய பணம் குறித்து கணக்கு கேட்டார்.

கள்ளத்தொடர்புக்கு இடையுறாக..

மேலும் ராமசாமி, தனலட்சுமியின் கள்ளத்தொடர்புக்கும், உல்லாசத்துக்கும் இடையுறாக இருப்பார் என சந்தேகமடைந்த தனலட்சுமியும், கோடியும் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் சேர்ந்து இரவு வேளையில் ராமசாமியை கொலை செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் தனலட்சுமி, கோடியுடன் சேர்ந்து ராமசாமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்
தொடர்ந்து தனலட்சுமி கைது செய்யப்பட்டார். ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், தலைமறைவாகிவிட்ட கோடியை வலைவீசி தேடிவந்தார்.

இந்த நிலையில் கோடி ராமநத்தம் அருகில் உள்ள ஏந்தல் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் முன்பு சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட கோடியை போலீசார் கைது செய்தனர்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=724567&disdate=4/20/2012&advt=2

பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் குத்திக்கொலை

பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் குத்திக்கொலை

நெல்லை, ஏப்.21-

பாளையங்கோட்டை அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்காதல் பிரச்சினை

நெல்லை மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 54). இவருடைய முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து கலா (35) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கலாவின் முதல் கணவர் ஏற்கனவே இவரை கைவிட்டு சென்று விட்டார்.

இதையடுத்து முத்தையாவும், கலாவும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கலாவுக்கும், வேறு சிலருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முத்தையா, கலாவை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்துக்கு வந்தார். அங்குள்ள அரிசி ஆலை அருகே குடிசைவீடு அமைத்து 2 பேரும் தங்கி இருந்தனர்.

கத்தியால் குத்தி கொலை

இங்கு வந்த பிறகும் கலா அடிக்கடி கள்ளக்காதலர்களை தேடி வெளியே செல்லத் தொடங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலா வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது முத்தையா, கலாவிடம் எங்கு சென்றாய்? என்று கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த முத்தையா கத்தியால் கலாவை குத்தினார். இதில் கலா ரத்த வெள்ளத்தில் செத்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கலாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருள் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை நேற்று கைது செய்தார்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=724824&disdate=4/21/2012&advt=2

கள்ளக்காதல்: கணவனை கொடைக்கானல் மலையில் இருந்து தள்ளிக் கொன்ற பெண்

கள்ளக்காதல்: கணவனை கொடைக்கானல் மலையில் இருந்து தள்ளிக் கொன்ற பெண்

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 17, 2012, 11:50 [IST]

நெல்லை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நெல்லை துப்புரவுத் தொழிலாளி கொடைக்கானல் மலையிலிருந்து உருட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அவரது மனைவி, அவரின் கள்ளக்காதலன் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்.

நெல்லை சந்திப்பு ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன். அவர் நெல்லை ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். அவரது மகன் சரவணகுமார். அவர் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கும், கொடைக்கானல் அண்ணா நகரைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த 8ம் தேதி கொடைக்கானலில் இருந்து சரவணகுமார், சந்தியா ஆகியோர் நெல்லைக்கு வந்தனர். 9ம் தேதி சரவணகுமார் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறி சென்றார். ஆனால் இரு நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து பரமசிவன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், எஸ்ஐ ஜேசுபாதம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சந்தியாவின் உறவினரான கொடைக்கானலைச் சேர்ந்த கனீகராஜ்,அவரது நண்பர்கள் மோகன், மணி ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சரவணகுமார் மனைவி சந்தியாவுக்கு திருமணத்திற்கு முன்பே கனீகராஜுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனை சரவணகுமார் கண்டித்துள்ளார்.

இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். கொடைகானலில் செய்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் நெல்லை வரும்போது கடத்திச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த 9ம் தேதி நெல்லை சந்திப்பு எஸ்டிடி பூத் அருகே நின்று கொண்டிருந்த சரவணகுமாரை மது குடிக்க அழைத்தனர். அதனை நம்பி அவர்களுடன் சென்ற சரவணகுமார் மது அருந்திய மயக்கத்தில் இருந்தார். அவரை ஒரு காரில் கொடைக்கானல் அருகே உள்ள மயிலாடும்பாறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து மலையில் இருந்து 400 அடி பள்ளத்தி்ல் உருட்டி கொலை செய்துவிட்டனர். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

நெல்லை சந்திப்பு போலீசார் கொடைக்கானலுக்கு சென்று சந்தியா, கனீகராஜ், மோகன், மணி ஆகியோரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அழுகிய நிலையில் கிடந்த சரவணகுமார் உடலை மீட்டனர். தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

http://tamil.oneindia.in/news/2012/04/17/tamilnadu-illicit-relationship-husband-murdered-in-kodaikanal-aid0175.html

 

இதற்கு வந்த நல்ல பின்னூட்டுகள் (comments)

================================================
 

GSA 17 Apr 2012 03:22 pm
ஆஹா, வாழ்க நம் கலாசார முன்னேற்றம்.
 
 
Kalyani 17 Apr 2012 12:50 pm

முன்பு மூணாறு தேனிலவுக்கு சென்று கணவனை அடித்து கொன்றாள் ஒரு பிசாசு. இப்போது இந்த பிசாசு. ஒரு பிசாசு சிறுவனை சாம்பார் வடை கொடுத்து கொடூரமாக கழுதை நெரித்து கொன்று பின் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை வேறு செய்தது. அந்த பிசாசுகள் எல்லாம் கொலை தண்டனை வழங்கப்பட்டர்களா ? இனிமேல் கணவன்மார்கள் கறுப்பு பூனைபடையுடன்தான் மனைவியை எதிர்கொள்ள வேண்டும்.
 
 
Manpuzhu O 17 Apr 2012 12:46 pm
மக்களே ஜாக்கிரதை! புருஷனை சொர்க்கத்துக்கு சீக்கிரமே அனுப்பிவைக்கற பத்தினி தெய்வங்கள் நாட்டுல அதிகமாயிட்டிருக்காங்க!